News Update

http://NewMannar.Wordpress.com

Mannar Network News

↑ Grab this Headline Animator

Advertisements

மனிதகுல சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் சமய அடிப்படை வாதங்கள்

சமயங்களின் அடிப்படை நோக்கங்கள் கோட்பாடுகள் இன்று உலகளாவிய ரீதியில் சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை விட சிதைந்துவிட்டன என்பது தான் யதார்த்த நிலையாகவுள்ளமையை நோக்க முடிகின்றது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவதானிக்கும்போது வேதனையே மிஞ்சுகின்றது. சமயங்கள் ஏன் தோற்றம் பெற்றன என்பது புரிந்து கொள்ளப்படாத  நிலையில் உலகம் இன்று தடுமாறுகின்றது. தறிகெட்டுச் செல்கின்றது என்பதே உண்மைநிலை.

மனிதகுலம் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிப்படுத்துபவையே சமயங்கள். சமயங்கள் வகுத்துக் காட்டியுள்ள வழிகளைக் கைக்கொள்ளாமல் சமயங்களின்  பெயரில் மக்கள் மத்தியிலே பிளவுகளும் கொலைகளும் குரோதங்களும் குடிகொண்டுள்ள கேவல நிலையைப் புத்தியுடன் உலகம் புரிந்து கொள்ளவில்லையென்றே தோன்றுகின்றது.

சமயங்களை மதங்கள் தர்மங்கள், மார்க்கங்கள் நெறிகள் என்று பலவாறு குறிப்பிடுகின்றோம். இறைவன் பெயரால் மனிதகுலம் வாழும் வழியை ஒழுங்கமைத்து செம்மைப்படுத்தி தனி மனிதனது தனித்துவத்தையும் பேணுவதுடன் மட்டுமன்றி  மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தும் வழிமுறைகளே  சகல சமய தத்துவங்கள் என்று உரக்கக்கூறப்பட்டாலும் இன்று சமயங்களின் பெயரால்  பல நாடுகளில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையும் காணமுடிகின்றது. சமயத்தின் பெயரால் தினமும் மனிதக் கொலைகள் மலிந்து காணப்படுகின்றன. இதுவா சமயங்கள் காட்டிய வழிகள்? சிந்திக்க வேண்டும். உண்மையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

சமயங்கள், அவற்றின் தத்துவங்கள் உலகுக்குப் பொதுவானவை. அவற்றைத் தரம் பிரித்து  ஏற்றத்தாழ்வு பார்க்கும் பக்குவம் சாதாரண மனிதருக்கில்லை. அதேபோல் சமயத் தலைவர்களும் சகலருக்கும் பொதுவானவர்கள். மக்களை ஒழுக்கசீலர்களாக பண்பாளர்களாக நற்குணங்கள் கொண்டவர்களாக ஒற்றுமையாக வாழ வழிகாட்டிகளாக அதற்கான போதனைகள்  செய்பவர்களாக இருப்போரே கௌரவம் மிக்க சமயத் தலைவர்கள்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’ என்பது தமிழ் மறை. வெளிவேடங்களால் பயனில்லை. உலகம்  வெறுத்தொதுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு முடிவளர்த்துக் கொண்டும் தாடி வளர்த்துக் கொண்டும் அல்லது  மொட்டையடித்துக்கொண்டும் இருப்பவர்கள் உயர்ந்த நிலையில் போற்றப்படும் பெரியவர்களாக  சமயத் தலைவர்களாக  ஆகமாட்டார்கள் என்பது தமிழ் வாக்கு. தெய்வக்குறளின் கூற்று, தீர்ப்பு.
நமது நாட்டில் சமய சண்டைகளுக்கான அடித்தளம் காணப்படுகின்றது. எந்தச் சமயம் உயர்ந்தது என்று வாதப் பிரதிவாதம் நடத்தப்படுகின்றது. ஒரு நூறு வருடம் வாழத்தகுதியற்ற மனிதன் பல நூற்றாண்டுகள் பழைமையான சமயங்களின் பெயர்களைத் தூக்கிப்பிடித்துப் போராடுகின்றான். சமயத்தைக் காக்கப் போராடுகின்றான்.

தமிழர்களின் தாய் மொழியான தமிழ்  மொழி உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. உலகிலுள்ள சகல சமயத் தத்துவங்களையும் ஏற்று உள்வாங்கி அவற்றை இலக்கியமாக வெளிப்படுத்தியுள்ள ஒரே உலக மொழி தமிழ் மட்டுமே அந்தப் பெருமை தமிழரையும் சாரும்.
மதகுருமாருக்கு மரியாதை செய்யும் பண்பு இன்று அருகிவிட்டது. அதற்கு மதகுருமாரென்று சீருடை அணிந்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர் என்பது யதார்த்தமானது.

சித்தார்த்தன் என்ற இந்து இளவரசன் ஆட்சியைத்  துறந்து இல்வாழ்வை, சுகபோகவாழ்வைத் துறந்து துறவறம் பூண்டது அந்தக்காலம். இன்று அப்புனிதரின் பெயரால் ஆட்சி அதிகாரமும் சுகபோகவாழ்வும் தேடும் நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. புத்த பகவானின் போதனைகளைச் சரிவரக் கடைப்பிடிப்போர் அருகிவிட்டனர். அவரின் திருவுருவுக்கு மலர் தூவி வழிபட்டால் போதும் என்ற நிலையேற்பட்டுள்ளது. பஞ்சசீலம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நமது நாட்டில் புனித மதகுருமார் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட அவஸ்தையும் அண்மையில் காணக்கிடைத்தது.  பொது மக்களைக் கொன்ற பழக்கம் இன்று சமயக்குருமார் வரை சென்றுவிட்டது. அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ ஆர்.டீ.பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொலை செய்ததன் மூலம் இந்நாட்டில் அரசியல் படுகொலைகளைத் தொடக்கி வைத்தவர்கள் சோமராம மற்றும் புத்தரகித்த ஆகிய புத்தமத தேரர்கள் என்று  வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மாற்றமுடியாது.

சமயக்குருமாரைஅரசியல் மயப்படுத்தும் பயங்கரத்தை இந்த நாடு கண்டுள்ளபோதும் அதை மறந்து விட்டது. புத்தமத குருமாரை அவமதிப்பது புனிதமகான் புத்தர் அதாவது தூய இந்து இளவரசர் சித்தார்த்தனை அவமதிப்பதாகும் என்பதால் ஒவ்வொரு இந்துவும் இது தொடர்பில்  வேதனை அடைகின்றான். புத்தரின் புனிதத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு. இன்று புத்தரின் பெயரால் இந்து மதம் பாதிப்புக்குள்ளாவது வேடிக்கையாயுள்ளது.

இந்த நாட்டில் புத்த சமயத்தவராலேயே புத்தகுருமார் தாக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் கொலைசெய்யப்படுவதும் நிகழும் போது  புத்தமதம் இந்த நாட்டில்காக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.பஞ்சசீலம் எனப்படும் புத்த சமயத்தலைவரால் தினமும் கூறப்படும் உறுதி மொழிகளான உயிர்கொலை  செய்யமாட்டேன் பிறரின் உடைமைகளைக் களவாடமாட்டேன், தவறானகாம இச்சைக்கு ஆளாகமாட்டேன், சூதாடமாட்டேன். போதைதரும் பொருட்களை  பயன்படுத்தமாட்டேன் என்பவை எந்த அளவில் பௌத்த தர்மத்தைப் பேணும் உறுதிகொண்ட நமது இலங்கை நாட்டில் காப்பாற்றப்படுகின்றன. நடைமுறையில் கைக்கொள்ளப்படுகின்றன  என்பதை நோக்கும்போது மிஞ்சுவது ஏமாற்றமே.

பல ஆண்டுகளுக்கு முன் ஓடும் புகையிரதத்தில்பௌத்த பெண் துறவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமையும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அத்தீச் செயலைச் செய்தவன் இந்துவும் அல்ல இஸ்லாமியனும் அல்ல கிறிஸ்தவனும் அல்ல என்பதும் தெளிவான உண்மையாகும்.

இறைவன்  ஒருவனே என்று கூறிக்கொண்டு அந்த இறைவன் படைத்த மனிதர்களை வேறுபடுத்தி ஒதுக்கும் படுபாதகமும் சமயத்தின் பெயரால் மார்க்கத்தின் பெயரால் நிகழ்கின்றன. மதமாற்றம் என்ற செயற்பாடு ஒரே இறைவன் என்ற  கோட்பாட்டைக் குழிதோண்டி ஆழப்புதைத்து விடுகின்றது.
அரசியல் கட்சிகள் தமக்கு ஆட்சேர்ப்பதைப் போல மதங்களும் ஆட்சேர்க்கும் அருவருப்பான செயற்பாடு நிகழ்ந்து வருகின்றது. நமது நாட்டில்  இன்று ஏற்பட்டுள்ள சமூக விரிசில்களுக்கு இதுவும் ஒரு ஏதுவாயுள்ளமையை  மறுக்க முடியாது.

மனித குலத்தின் சகோதரத்துவ உணர்வை இணக்கத்தை அழித்து குரோதத்துக்கும் கொடும் பகைக்கும் வழிசெய்யும் இந்த மதமாற்றம் இந்நாட்டின் நலனுக்கு ஏற்புடையது மட்டுமல்ல  பாதகமானதும்கூட. மதமாற்றம் என்ற மூடச்செயல் கண்டிக்கப்பட வேண்டும்.
|
கட்டுப்படுத்தப்படவேண்டும். இதில் புத்தியுள்ளவர்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கமாட்டார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் சிலுவையா,வாளா என்று கேட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இன்று உலகில் அந்த நிலை இல்லை என்பது வரவேற்புக்குரியது.
இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் சமயம் என்பது மக்களின்  நிம்மதியான வாழ்வுக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிட்டது. ஒரே சமயத்துக்குள்ளேயே குத்து வெட்டு கொலைகள் என்று விரோதங்கள் காணப்படுகின்றன.

தினமும் கேட்கும் பார்க்கும் செய்திகள்  திகிலூட்டுகின்றன. சமயத்தின் பெயரால் அதுவும் ஒரே சமயதின்  உட்பூசலால் பிரிவுகளால் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வருகின்றன. ஈராக், பாகிஸ்தான், துருக்கி, சிரியா, லெபனான், லிபியா எகிப்து என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.  இச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்மையும் இழிவுபடுத்தி  தாம் பின்பற்றுவதாகக் கூறும் சமயத்தையும் மார்க்கத்தையும்  இழிவு படுத்துகின்றார்கள் என்பதைப் புரியாமலுள்ளனர். விளங்கிக் கொள்ளும் புத்தியற்றவர்களாயுள்ளனர் என்பதே  உண்மையாகும்.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் தினமும் எங்கோ ஒரு மூலையில் கொலைக்களம் ஒன்று திறக்கப் படுகின்றது. மார்க்கத்தின் பெயரால் பலவழிபாட்டிடங்கள் பள்ளிவாசல்கள், மசூதிகள் தாக்கப்படுகின்றன,  தகர்க்கப்படுகின்றன இஸ்லாமிய நாடுகளல் தினமும் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் பௌத்தர்களாலோ, இந்துக்களாலோ நடத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியரே அந்நாடுகளில் இந்த அடாவடித்தனம் செய்கின்றனர்.

சுயநலத்திற்காக சுயதேவைகளுக்காக சமயத்தை, மார்க்கத்தை தலையில் சுமந்து கொண்டு அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் சமயவாதிகளுமல்ல,  ஆன்மீகவாதிகளுமல்ல.
ஒழுக்கமற்ற சமய வாழ்வு உருப்படாது. ஒழுக்கமற்றவன் குரோத சிந்தனை கொண்டவன், பண்பற்றவன், மனிதத் தன்மையற்றவன் எவனும் ஆன்மீகவாதியுமல்ல. சமயத் தலைவனும் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மதம் மக்களுக்கு அபின் என்ற கூற்று இன்றைய  நிலையை நோக்கும் போது உண்மையானது என்றே தோன்றுகின்றது. மதவெறியை ஏற்படுத்தி மக்கள் மத்தியிலே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மதங்கள்  தேவைதானா என்று சிந்திப்பதிலும் தவறில்லை.

அமெரிக்கா சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட கிறிஸ்தவ  கன்னியாஸ்திரி ஒருவர் சுவாமிகளிடம் தான் இந் சமயத்தில் இணைய வழிகாட்டுமாறு கேட்டுள்ளார். அதைச் செவிமடுத்த சுவாமிகள் சகோதரி நீங்கள்  பின்பற்றிவரும் கிறிஸ்தவ மதத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்டு அது காட்டும் வழியில் வாழ்ந்து வருவீர்களானால்  நீங்கள் ஒரு இந்து ஆவீர்கள்  என்றார்  என்பது  ஒரு பதிவாகும்.

எவரொருவர் தான் பிறந்த சமயத்தில் பூரண நம்பிக்கை  வைத்து அதுகாட்டும் நல்வழியில் வாழ்கின்றானோ அவனே உண்மையான சமயவாதி. ஆன்மீகவாதி என்பது இன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சமயங்களிடையே குரோதத்தை வளர்த்து மக்களைப் பிளவு படுத்துவது சமய வழிமுறையும் அல்ல, சமுதாய நலனுக்கு உகந்ததுமல்ல. இலங்கை ஒரு பல்லின, பல மொழிகள் கொண்ட பல சமயங்களைப் பின்பற்றும் நாடு. இதை முதலில் ஒவ்வொருவரும் புரிந்து  கொள்ள வேண்டும். ஒருவர் மொழியை, மதத்தைப் பண்பாடுகளை மற்றவர்கள் புரிந்து மதித்து நடத்தல் வேண்டும். கௌரவிக்கப் பழக வேண்டும்.
அதேபோல் தமது நோக்கை, கொள்கையை,  தத்துவங்களை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. திணிக்க முற்படவும் கூடாது. தழிழ் மொழியைப் புறக்கணித்து இன்று நாடு படும் அவலம் ஒரு கற்றறிந்த பாடமாக அமைய வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி சமூக நலனுக்குப் பலவற்றைச் செய்யலாம். அதைவிடுத்து மதமாற்றம் போன்ற சமூகப் பிளவுகளுக்கு உட்படுத்தக் கூடிய செயல்கள் நிகழ்வது நாட்டிற்கும், சமூகங்களின் உறவுக்கும் நல்லதல்ல.

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது அச்சமில்லாத நிம்மதியான வாழ்வு, அந்த நிம்மதியான வாழ்வுக்கு புனிதமான சமயங்களின் பெயரால் பாதிப்பு வராது பார்த்துக் கொள்ள வேண்டியது சமூக நலப் பொறுப்பாளர்களது  கடமை. ஒரு சில சலுகைகளுக்காக வசதிவாய்ப்புகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் காட்டிக் கொடுக்கும், அவலத்தில் தள்ளும்  செயற்பாடுகள் இனியும் தொடராது உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

சமயம் என்பது வாழ வழிகாட்டும் தத்துவம். அதை உணர்ந்து கடைப்பிடிப்பவனே  சமவாதிக, ஆன்மீகவாதி. அதைவிடுத்து சமயத்தின் பெயரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அது கூறும் புனித வழிகாட்டல்களை புறந்தள்ளி தூர எறிந்து  ஏறிமிதித்து கூச்சலிடுபவன்  தான் பிறந்த சமயத்தை இழிவுபடுத்தப் பிறந்தவன். சிதைக்கப்பிறந்தவன். பசுத்தோல் போர்த்திய புலி போன்றவன் என்பதே உண்மை.

எனவே நமது நாட்டில் முளைவிடும் சமய அடிப்படை வாதம்  என்ற முரட்டு, மோட்டுவாதங்களை வளரவிடக்கூடாது. மதமாற்றத்தின் மூலம்  நோயைத் தடுக்கவோ முதுமையடைவதைத் தடுக்கவோ, மரணத்தைத் தடுக்கவோ முடியுமா ? அதற்கு உத்தரவாதம் அதாவது நோய், முதுமை, இறப்பு ஆகியவற்றைத் தடுத்து குறிப்பிட்ட வாழ்நாளில் ஒரு நாளாவது அதிகமாக  இந்த உலகில் வாழவைக்க முடியும் என்ற உத்தரவாதத்தை எந்தவொரு சமயத்தலைவராலோ, குருவாலோ அல்லது மதமாற்றம் செய்ய எத்தனிப்பவராலோ வழங்க முடியாது. பொறுப்பற்ற, போலித்தனமான மதமாற்ற சிந்தனையும்  இந்நாட்டின் நிம்மதிக்கு உலை வைக்கும் சக்தியாகிவிட்டது என்பது  மறுக்கமுடியாததாகிவிட்டது.

சர்வ மத தலைவர்கள் மகாநாடு கூட்டிப் பயன் இல்லை. சர்வமத மக்களையும் இணைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் . சமயங்கள் மனிதகுல நலனுக்குத் தடையாக இருப்பது ஏற்கக் கூடியதல்ல. நல்லதும் அலல். இதைப் புரிந்த கொண்டால் நாடும் உருப்படும். உலகமும் உய்வுபெறும். இது புத்தியுள்ளவர்களுக்கே புரியும்.

[http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3634:2013-03-25-17-43-49&catid=293:article&Itemid=542]

சிங்கள மயமாவதிலிருந்து பாதுகாக்கப்பட வட, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – கிழக்கு முஸ்லிம் சமாதான சபை

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட  வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு  ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு 29.07.1987  இல் இலங்கை  இந்திய  உடன்படிக்கை ஏற்பட்டது.

இலங்கையின் ஐக்கியம் , இறைமை , பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாக்கும்  நோக்கத்தோடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்  ஆகிய பல இன மக்கள் வாழும் பல மொழி  பேசும் ஒரு நாடாக இலங்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு இன மக்களும்   அக்கறையோடு பேணிப் பாதுகாக்க வேண்டிய தனித்துவமான  கலாசாரத்தையும் , மொழியையும் கொண்டுள்ளவர்கள் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடம் என்றும் இவர்கள் எக் காலத்திலும் மற்ற இன  மக்களோடு இங்கு சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பிரகடனத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு 1988 செப்டெம்பர் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 10 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தேர்தல் 1988 நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வட கிழக்கு மாகாண சபை 1988 டிசம்பர் தொடக்கம் 1990 மார்ச்  மாத காலத்தில் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினால் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை அதன் 14 மாத நிர்வாகத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளால் ஆட்சி நடத்த முடியாமல் தத்தளித்தது.

வட கிழக்கு மாகாண சபையின் அன்றைய முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடந்த மாகாண சபையின் விசேட கூட்டத்தில் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கு உடனடியாக நிறைவேற்றுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 19 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை காரணமாகத் தன்னிச்சையாக தமிழ் ஈழத் தனி நாட்டினைப் பிரகடனம் செய்தார்.  அதனைத் தொடர்ந்து வட கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது.

பின்பு 2006 ஒக்டோபர் 16, திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தால் அரசாங்க வர்த்தமானியில் ஜனாதிபதியினால் அவசர கால நிலைமையில் வெளியிடப்பட்ட பிரகடனத்தால் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைக்கப்பட்டமை  செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஒன்றிணைந்த வட கிழக்கு பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இத் திட்டத்தின் குறிக்கோள் அதிவிரைவில் சிங்கள மக்களைக் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடிய இனத்தவராக்குவது தான். இந்த மறைமுகமான திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரச உதவியோடு கூடிய திட்டமிட்ட சிங்களவர் குடியேற்றம் ,உல்லாசப் பிரயாணம் ,ö பளத்த மத மறுமலர்ச்சி ஆகியவற்றினை நோக்கமாகக்  கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைப் பிரதேசத்தில் உள்ள ஒலுவில் துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட தீகவாபி பிரதேசத்தையும் உள்ளடக்கிய  ஒரு பிரதேச சபையையும் செயலகத்தையும் புதிதாக ஏற்படுத்தி இப் பிரதேசத்தில் சிங்களவரைக் குடியேற்றல், தொப்பிகல (குடும்பிமலை) பிரதேசத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக ஆரம்பித்து சிங்கள மக்கள் அதிகப் படியாக வரக் கூடிய குடிசன மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கிழக்கு மாகாண சிங்கள மயமாக்கல் திட்டப்படி வட கிழக்கு  பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாண நிர்வாகம் இன ரீதியாகப் பெரும் மாற்றமடைந்து வருகிறது. முன்னாள் திருகோணமலை அரசாங்க அதிபர்கள் கிழக்கு மாகாண முதற் செயலாளராகவும், பொது நிர்வாகச் செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் மாத்தளை அரசாங்க அதிபர் மாகாண பொது நிர்வாக சேவை ஆணைக் குழுவின் செயலாளர், மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்ற உயர் பதவிகளுக்கு பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் , முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அம்பாறை,  திருகோணமலை  மாவட்டங்களுக்கு இற்றைவரை முஸ்லிம் மாவட்ட செயலாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் ஒரு பகுதியாகவிருந்த பிந்தனைப்பத்து சிங்களவர் ஒரு இலட்சம் பேர் கிழக்கு மாகாண  அம்பாறை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த  கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் பேசும் அங்கத்தவர்களாலோ அல்லது கிழக்கு மாகாண  அமைச்சர்களாலோ இயலாமலிருக்கிறது.
இந்திய அரசாங்கத்தின் உ றுதியான தலையீட்டினால் இலங்கை இந்திய உடன்படிக்கையும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தச் சட்டமும் ஏற்பட்டன. தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்ட வட கிழக்கு  மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது.

மேலும்  கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக ஒன்றிணைந்தே இருக்க வேண்டும் என்பதும் அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டிருக்கும் காணி உரிமையும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழர்களின்  கோரிக்கையாகும்.

இந்த நிலையில் வட கிழக்கு முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது?  இது தான் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. இச் சூழலில் இது பற்றிய எமது நிலைப்பாட்டை நாம் இன்றைய அரசியல் அரங்குக்குள் உறுதியாக முன்வைக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

1964 இல் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் 9 ஆவது மாநாட்டில் தலைவர் தந்தை செல்வநாயகம் வட கிழக்கு அரசியல்  அதிகாரம் தமிழ், முஸ்லிம்  இனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனப் பேசினார். அதிகாரங்களை நியாயமான அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்லிணக்க ஏற்பாட்டைச் செய்து கொள்வதற்கான முயற்சிகள் எம்மால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பயனாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இலங்கை முஸ்லிம் கவுன்சிலுக்கும் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 17 ஆம் திகதிகளில் சென்னையில் நடந்த பேச்சு வார்த்தையில் பெரும்பான்மையான விடயங்களில் இணக்கம் காணப்பட்டன. முஸ்லிம்களின் நலன்குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அழைப்பு விடுத்தது. தமிழீழ விடுதலைப் பு லிகளின் தலைவர்களுடன் 1988 ஏப்ரல், 15 ஆம், 16 ஆம், 19 ஆம் திகதிகளில் சென்னையில்  மிக சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு 1988 ஏப்ரல் 21 ஆம் திகதி ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

 

இதே சந்தர்ப்பத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் எங்களைச் சந்தித்து முஸ்லிம்களுடன் தாங்கள் கொண்டுள்ள நட்புறவையும் இரு இனங்களும் இணக்கமாக நடந்து கொள்ளத் தாங்கள் கொண்டுள்ள விருப்பத்தையும் எங்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.  இந்தப் பேச்சுவார்த்தைகள் யாவும் இலங்கை , இந்திய அரசாங்கங்களின் அனுசரணையுடனேயே நடைபெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகள் தமிழ் , முஸ்லிம் இன ஒற்றுமையினதும் நல்லிணக்கத்தினதும் சாசனங்களாக வரலாற்றில் உள்ளன.

 

முஸ்லிம்களின் தனித்துவத்தையும் நலன்களையும் பேணிப் பாதுகாப்பதற்கென வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தக்  கூடிய ஏற்பாடுகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் அமைப்புகளும் பின்வரும் விடயங்களில் கருத்தொருமைப்பாடு கண்டுள்ளன.

 

  • முஸ்லிம்களின் தனியானதும் வேறுபட்டதுமான இன, மத,கலாசாரம் பேணிப் பாதுகாக்கப்படுதல்.
  • தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடமென அங்கீகரிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம்களது வரலாற்று வசிப்பிடங்கள் முஸ்லிம் இனத்தவரின் சனத்தொகைக்கேற்ப காணி நிலங்கள் , இயற்கை வளங்கள் உள்ளடக்கப்பட்டு தனித்தனியான அரசியல் நிர்வாகப் பிரிவுகளாக அடையாளம் காணப்படுதல்.
  • முஸ்லிம் வரலாற்று வாழ்விடங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவை சம்பந்தமான  நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்கள் கைவசம் இருத்தல்.
  •  வேலை வாய்ப்பு ,காணிப் பகிர்வு ,பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடு சம்பந்தமானவற்றில் முஸ்லிம்கள் வரலாற்று வாழ்விடங்களுக்கு நியாயமான பங்கு கொடுத்தல்.
  • காணிப்பங்கீட்டில் முஸ்லிம் கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்திற்கு குறைவில்லாமலும் ,மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்திற்கும்  எஞ்சிய  வட மாகாணத்தில் 10 வீதத்திற்கும்  உருத்துடையவர்களென அங்கீகரித்தல்.
  • ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கு 35 வீதத்திற்கு குறைவில்லாத முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அவசியமான திருத்தங்களை அரசியல் சாசனத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல்.

 

ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கான முஸ்லிம்களின் இணக்கப்பாட்டிற்கு தேவையான முக்கிய நடவடிக்கைகள்

 

தமிழ் போராளிகளினால் வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் , அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி, வீடு வாசல்கள், சொத்துடமைகள் ஆகியவற்றின் பூரண விபரம் முஸ்லிம் உரிமைகள் மன்றத்தினால் சேகரிக்கப்பட்டிருக்கிறது.  இப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுமானால் வட கிழக்கில் வாழும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நிலவும் விரோதம் நீங்கி நல்லிணக்கத்திற்கான சாந்தியும் சமாதானமும் ஏற்பட வழி பிறக்கும்.

 

ஏற்கனவே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுமிடையில் ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுதல்  வேண்டும்.

 

ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினருக்கு சம பிரதிநிதித்துவம்  தமிழர் 50 வீதம்  37 அங்கத்தவர்கள் , முஸ்லிம்கள் 35 வீதம்  26  அங்கத்தவர்கள் , சிங்களவர் 15 வீதம் 11 அங்கத்தவர்கள் , 5 அங்கத்தவர்களைக் கொண்ட வட கிழக்கு அமைச்சரவையில் தமிழர் 2 அமைச்சர்கள் , முஸ்லிம்கள் 2 அமைச்சர்கள் , சிங்களவர் 1 அமைச்சர் என்ற ரீதியில் ஆட்சி அதிகாரங்கள் பங்கிடப்பட வேண்டும்.

 

இவ்வாறான  அதிகாரப் பகிர்வினைச் சாத்தியப்படுத்துவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

  • முதலாவது  முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வட கிழக்கு தமிழர்களின் இணக்கம்.
  • இரண்டாவது  தமிழர் கோரும் ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்களின் இணக்கம்.
  • மூன்றாவது  வட கிழக்கில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்படும் இணக்கப்பாட்டினை சட்ட பூர்வமாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் உ றுதியான நிலைப்பாடு.

 

முஸ்லிம் இனத்தவரின் உரிமைகளை பாதுகாக்க  நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அத்தகைய நடவடிக்கைகளினால் தமிழரின் கோரிக்கைப் படி அரசியல் ,  நிர்வாக தேவைகளுக்காக ஒன்றிணைக்கப்படும் வட கிழக்கு மாகாணங்களின் தனித்துவம் குந்தகப்படுத்தப்படவோ அல்லது குலைக்கப்படவோ கூடாது.

 

எம். ஐ.எம். முஹியத்தீன்
பொதுச் செயலாளர்
கிழக்கு முஸ்லிம் சமாதான சபை

http://www.thinakkur…icle&Itemid=542

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது: CNN News

CNN தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ”பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்” Half of New Testament forged, Bible scholar says என்ற தலைப்பில் பின் வரும் இணைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதை இங்கு தருகிறோம்

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்

-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)

உடல் பலஹீனமான முதியவர் ஒருவர் சிறைச்சாலையில், குளுரில் நடுநடுங்க அமர்ந்து இருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.

“ஏனென்றால், நான் இப்பொழுதே பலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)

அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிருத்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .

ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.

எஹ்ர்மன்(Ehrman)

“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிருத்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜெட்(Forged)” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.

மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.

இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.

இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?

எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “”ஃபோர்ஜ்ட்” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!

வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.

வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.

அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,

தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால் எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.

முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் ஜான் (யோவான்) மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

இதற்க்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.

பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?

புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.

அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.

அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.

இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.

முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.

மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.

ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?

பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறித்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் . கிறித்துவ தேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.

தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.

ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.

இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறித்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !

அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.

ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.

விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்க்கு மாற்றமானது.

“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிருத்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !

பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!

“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும் .!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.

ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !

பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்வதர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.

ஆனாலும், அதை பல கிறித்தவ சகோதரர்கள் கிறித்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.

அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!

தகவல்  Tntj

CNN NEWS
http://religion.blogs.cnn.com/2011/05/13/half-of-new-testament-forged-bible-scholar-says/

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோமாளிகள் –

TNA.jpg இன்று இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஒவ்வோர் அசைவிலும் ஒடுக்குமுறை இராணுவையும் தனது கோரக்கரங்களால் கட்டுப்படுத்துகிறது. சிவில் நிர்வாகம் இராணுவ தலைமையகத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வோர் நகர்வும் இராணுவத்திற்கும் அதன் துணைக் குழுக்களுக்கும் தெரியாமல் நடந்தேற முடியாது. ஒரு தேசிய இனத்தை, ஒரு மக்கள் கூட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து சிதறடிப்பதற்கு அப்பாவி மக்களின் மீது ஒவ்வொரு முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசு தனது இனச் சுத்திகரிப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கருத்தியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும், பௌதீக இருப்பிலும் தனது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்த மூன்று வேறுபட்ட தளங்களிலும் தனது தாக்குதலை நடத்துவதற்காக வன்னியில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை சில இரவுகளுக்குள் கொன்றொழித்துவிட்டு உலக அரங்கில் இறையாண்மையுடைய அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் பேரினவாத அரசு அதன் முகவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முதலில் சுயநிர்ணய உரிமைக்காக மக்களின் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் என்றும் இது புலிகளுக்கு மட்டுமே உரித்தான பயங்கரவாதப் போராட்டம் என்றும் இனவாதப் போராட்டம் என்றும் கருத்தியல் தளத்தில் இலங்கை அரச பயங்கரவாதிகள் உலகின் ஏகபோக அரசுகளின் துணையோடு நடத்ததுகின்ற தாக்குதல் ஆபத்தானது. அழித்துத் துவம்சம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சூறையாடப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகின்ற கருத்தியல் யுத்ததத்தின் தமிழ் முகவர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்தது.

இரண்டாவதாக, வடக்கிலும் கிழக்கிலும் இனப்படுகொலைக்குப் பின்னான பொருளாதாரம், உற்பத்தி என்பன இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு சந்ததையைச் சார்ந்த உற்பத்திகளாகட்டும், உள்ளூர் உற்பத்தி நிலைகளாகட்டும் இராணுவத்தின் நேரடியான தரகுகள் ஊடாகவே நடத்தப்படுகின்றன.

மூன்றாவதாக, தமிழ்ப்பேசும் மக்களின் பௌத்தீக இருப்பைக் கேள்விகுள்ளாக்குவது. வட கிழக்கில் சந்திக்குச் சந்தி புத்தரின் சிலைகள் எழுகின்றன. இராணுவம் நிரந்தரமாக நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அதே ஆக்கிரமிப்பைப் போன்று இராணுவத்தின் குடும்பங்கள் அவலத்தில் வாழும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்கள் அகதிகளான மக்களின் நிலங்களைச் சூறையாடுகின்றன.

இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்; மக்களின் சிவில் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்பன போன்ற முழக்கங்களே தமிழர் அரசியலில் அக்கறை கொண்ட சாதாரண மனிதாபிமானி கூட முன்வைக்கக்கூடியவை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இராணுவம் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதைத் தாம் விரும்பவில்லை எனக் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார்.

தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்காக உருவான கூட்டமைப்பின் தலைவர், பழுத்த அரசியல்வாதி இந்தக் கருத்தை முன்வைத்தமை கண்மூடித் தனமாக அவரை நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சம்பந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய அதிர்வலைகளை எதிர்கொள்ள வழமையான இலங்கை அரசின் கருத்தியல் முகவர்கள் களத்தில் இறங்க ஆரம்பித்தனர். சம்பந்தரின் உரையின் உள்ளர்த்ததை மேலும் கீழும் ஆராய்ந்து புதிய விளக்கங்களை முன்வைத்தனர். சம்பந்தர் கூறியவற்றை அவர்கள் தங்களது மொழியில் வேறுவகையில் நியாயப்படுத்தினர்.

இலங்கை அரசு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கருத்தியல் யுத்ததம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அடுக்குகளாக கடந்த நான்கு வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.

1.சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதும் அழிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

2. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதம்.

3. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ‘அவர்கள் முன்வைக்கின்ற’ அபிவிருத்திக்கு எதிரானது.

4. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதீய ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிறது.

5. சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ‘சர்வதேச அரசுகள்’ ஏற்றுக்கொள்ளாது.

இது போன்ற வெவ்வேறு அளவிலான பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சனைகளூடாக இலங்கை அரசின் கருத்தியல் யுத்தம் ஆரம்பிக்கும் அதே வேளை அதற்கான இடைவெளிகளையும் கடந்தகால போராட்டத்தின் தவறுகள் விட்டுச்சென்றிருந்தது.

இக்கருத்தியலை தமிழ்ப் பேசும் மக்கள் மீது உட்செலுத்தும் அதே வேளை அவர்களை அழித்து, சூறையாடு துவம்சம் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது பேரினவாத அரசு.

இன்று இந்தக் கருத்தியலுக்கு அப்பால் இலங்கையின் எல்லைக்குள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள யாரும் எஞ்சியிருக்கவில்லை. அதன் பிரதான முகவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய குறுந்தேசியவாத ஏகாதிபதிய சார்பு வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய முழக்கத்தை தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக மட்டுமே இன்றுவரை பயன்படுத்தி வந்துள்ளது.

இலங்கையின் மிகப் பயங்கரமான இனக்கொலையாளி சரத் பொன்சேகாவுடனும், பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் வாக்குப் பொறுக்கிய தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய அரசியல் வெறும் வாக்குப் பொறுக்கும் கருவி மட்டுமே.

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் வரைக்கும் தமிழ்த் தேசியயம் என்பது இந்திய அரசிற்கும் ஒரு வகையில் மேற்கு வல்லரசுகளுக்கும் தேவையானதாக அமைந்திருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கான இராணுவ அரசியல் தேவைகள் காணப்பட்டன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய அரசியலை தமது நலன்களின் அடிப்படையில் பாதுகாக்கும் தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது. அதன் மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலான எழுச்சிகளை ஒடுக்குவதற்கு இலங்கை அரசிற்கும் அது பயன்பட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்டமாக எழுச்சி பெற்ற வேளையிலும் இதே அரசியல் தொடர்ந்தது. 90களின் இறுதிவரை நகர்ந்த இந்த அரசியல் சூழலில், ஒரு புறத்தில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், மறு புறத்தில் முழு இலங்கையுமே முடிவுகளற்று அழிந்துகொண்டிருந்தது. அதன் பின்னான காலப்பகுதியில், தமிழ்த் தேசிய அரசியலின் தேவை இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அற்றுப் போக, புதிய அரசியல் சூழல் தோன்றுகிறது.

அதனோடு கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உருவாகின்றது. ஏற்கனவே அழிக்கப்படக்கூடிய அரசியல் கட்டமைப்புக்களைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான முன் நடவடிக்கைகளை அதன் தேவை அற்றுப்போன அனைத்து நாடுகளும் மேற்கொள்ள ஆரம்பித்தன. ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச தொடர்பாளரும் ஆயுத வழங்குனருமான கே.பி உள்வாங்கப்பட்டார். பல்வேறு நாடுகள் ஊடாக இலங்கை அரசு அழிவு ஆயுங்களைக் குவித்துக்கொள்வதற்கு அனுமதி கிடைத்திருந்தது. இரசாயன ஆயுதங்கள் தங்கு தடையின்றி இலங்கை இராணுவத்தின் கைகளில் கிடைத்தது.

புலிகளின் நம்பிக்கைக்கு உரிய ஜனநாயக முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கிறது. வாக்கு வங்கிகள் பலமடைகின்றன. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் வயது முதிர்ந்த ‘தேசியத் தலைவராக’ சம்பந்தன் தரமுயர்கிறார்.

எண்பதுகளின் இறுதியில் புலி ஆதரவாளர்களை வெட்டிக் கொலைசெய்வது என்ற அடிப்படையில் தோன்றிய மண்டையன் குழு என்ற இந்திய இராணுவத் துணைக்குழுவை சுரேஷ் பிரேமச்சந்திரனே தலைமை தாங்கினார். யாழ்ப்பாண்த்தில் அசோக் ஹொட்டேலை தலைமையகமாகக் கொண்டியங்கிய இந்தக் குழுவினால் கொலைசெய்யப்பட்ட அப்பாவிகள் பலர். இந்த சுரேஷ் பிரேமச்சந்திரனே புலிகளின் அழிவின் பின்னர் இந்திய அமரிக்க நலன் சார்ந்த அரசியலை இலங்கையில் முன்னெடுப்பதற்காக தயார்படுத்தப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்.

அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட போது அவர் இன்று கூறுவது போன்றே வடகிழக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறிய சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவரானார். இலங்கை அரச சலுகைகளைப் பெறுவதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளேயே சர்ச்சைக்கு உள்ளான சம்பந்தரை பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக விக்கிலீக்ஸ் கேபிளின் தகவல் ஒன்று கூறியது. அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்துவதற்காக தயார்செய்யப்பட்ட பிரதான மனிதனே சம்பந்தர்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவனும் சட்டத்தரணியும் மக்களுடன் குறைந்தபட்ச தொடர்புகளுமற்ற கொழும்புத் தமிழரான சுமந்திரன் அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்த தயார்செய்யப்பட்ட மூன்றாவது நபர்.

இந்த மூன்று பிரதான தேசிய அரசியல் கோமாளிகளதும் பின்னணியில் இந்திய – அமரிக்க அரசுகளே செயற்படுகின்றன. தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்தே அதன் அரசியலின் பின்னணியில் செயற்பட்ட அதே அரசுகள் இன்றும் செயற்படுகின்றன. இந்திய அமரிக்க ஆண்டவர்கள் சொல்வதை அடியார்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான். இதற்கு மேல் எதுவும் கிடையாது.

இவர்கள் அமரிக்கா சென்றுவிட்டு வரும் வழியில் கனடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சம்பந்தர் வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானதில்லை என்றார். அது அவரது எஜமானர்கள் அவருக்குக் கொடுத்த உத்தரவு. கடந்தவருடம் இந்தியா சென்று திரும்பிய சுமந்திரன் நாம் ஒன்றும் செய்ய முடியாது, இந்தியா சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்றார்.

இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அரசுகளுக்கு மகிந்த அரசின் இருப்பும், இனச் சுத்திகரிப்பும் இன்றைய தேவை. அதன் கருத்தியல் முகவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அவர்களின் அச்சுக்களாக தோற்றம் பெற்ற சிறிய கீழ் நிலை முகவர்களே சம்பந்தனின் உரைக்கு பொழிப்பு எழுதும் எழுத்துலக ஜாம்பவான்கள். கொழும்பு சிங்களத் தரகு முதலாளிகளுக்கும் தமிழ் தரகு முதலாளிகளுக்கும் ஆண்டாண்டு காலமாக திரைமறைவில் நடைபெற்ற நாடகத்தை இப்போது பொது மேடையில் நடத்துகிறார்கள். சம்பந்தனையும் சுமந்திரனையும் அவர்களின் ஜால்ராக்களையும் அம்பலப்படுத்தும் அதே வேகத்தில் இதன் அடியில் படர்ந்திருக்கும் அரசியலையும் வெளிக்கொண்டுவரத் தவறினால் புதிய சம்பந்தர்கள் வேறு முகத்தோடு களத்தில் இறங்கிவிடுவார்கள்.

http://inioru.com/?p=32419

சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது!

Batti-TNA-150812-k-150டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்து விட்டார். எனவே அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும்.

‘புரூட்டஸ் நீயுமா?’ என்றொரு வரலாற்றுக் கேள்வி வழக்கிலுண்டு. அதைப் போல் ‘சம்பந்தன் நீங்களுமா?’ என்ற கேள்வி உலகின் பொரும்பாலான தமிழர்களிடையே எழுந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 7ஆம் திகதி ஆற்றிய ஒரு பகுதி உரை அவர்களின் இதயங்களில் ஈட்டியால் குத்தியதாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டியலிட்டு சம்பந்தன் குறிப்பிட்டார். ஆனால் அந்த உரைக்கு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புலிகளைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் உலகத் தமிழர்களின் கவலைக்குரிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என இலங்கை அரசு வேண்டுமானால் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி கூறிக்கொள்ளலாம். ஆனால், தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் � அதிலும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக புதல்வர்களை அள்ளிக் கொடுத்த திருக்கோணமலைத் தொகுதியைப் பிரதிநித்துவப் படுத்துபவர் � சம்பந்தன் அவ்வாறு தெரிவிக்கலாமா?

நாலும் தெரிந்தவர். அரச பயங்கரவாதத்தினால் எத்தனை ஆண்டுகாலமாக தமிழினம் அல்லற்பட்டு சீரழிந்து வாழ்விழந்து வருகின்றது என்பதையும் அறிந்தவர் அவர். புலிகளில்லாத கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக தமிழர்கள் பல இடங்களில் அடிமைகள் போல் நடத்தப்படுவதை கண்கூடாகக் கண்டுள்ளார்.

இலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர், யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததை, இது ஒரு அரச பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சம்பந்தன் அதற்கு எதிர்மறையாக விடுதலைக்காகப் போராடிய ஓர் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று எங்ஙனம் கூற முடியும்?

அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சராக இருக்கும் திருமதி. ஹிலாரி கிளின்டன் அம்மையார் ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலின்போது ஏனைய பயங்கரவாத அமைப்புகளின் அட்டவணையில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதை அவருக்கு இப்போது ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றின் தீர்ப்பை இங்கு குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து ஆயுதக்கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து மேல் நீதிமன்றம் தமிழர் ஒருவருக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அவர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவரையும் நிரபராதி எனத் தீர்ப்பளித்து விடுதுலை செய்தது. �சொந்த வீட்டில் இருப்பவனை அடித்துத் துரத்திவிட ஒருவன் முனைந்தால் சொந்த வீட்டுக்காரன் திருப்பித் தாக்குவது யதார்த்தமானது. ஆயுதங்களோடு அவ்வாறு வரும் ஒருவரை ஆயுதங்களோடு எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாதது. தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதங்களோடு வரும் இராணுவத்தினரை ஆயுதங்களோடு எதிர்கொள்கின்றனர்.

எனவே, அதனை பயங்கரவாத நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ததை பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என நியூசிலாந்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு உலகின் முன்னணி ஊடகங்கள் யாவற்றிலும் வெளியாகி இருந்ததை சம்பந்தனும் அறிந்திருப்பார். அதேநேரத்தில் ஐரோப்பிய நீதிமன்றிலும் தமிழீழ விடுதுலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பல்ல என்று தீர்ப்பு வழங்குமாறு கோரி இரண்டு மனுக்கள் தாக்கலாக அதனை ஆதரித்து உலகின் பிரபல சட்டத்தரணிகள் வாதாடி வருகின்றனர்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதினால் வழக்கு விசாரணை முடிவு இன்னமும் வெளியாகவில்லை. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் சில தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சாட்டப்பட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ததன் குற்றச்சாட்டு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்காததுடன் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டனர் என சம்பந்தன் குறிப்பிட்டதின் காரணம் அவருக்கே சிலவேளை புரியாதிருக்கலாம். ஏனெனில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு உலகிலுள்ள சகல மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கோரி வருகின்றன. போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு மீறியதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என ஐ.நா. சபையே பகிரங்கமாக அறிவித்துள்ளது.

எனவே, அவ்வாறான அரசுடன் எங்ஙனம் ஜனநாயக மனித உரிமைகளைப் பாதுகாக்க போராட முடியும்? ஜனநாயக மனித உரிமை பாதுகாப்பு போராட்டங்கள் மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு அவை படுதோல்வியடைந்த நிலையிலேயே வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியதையும் அவரே சுட்டிக்காட்டுகிறார்.

அவர் தமது நாடாளுமன்ற உரையில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கைதட்டலுக்கும் மத்தியில் தெரிவித்தார். முற்றுமுழுதாக அது உண்மைக்கு மாறான தகவல் என இதுவரை அவர் அறியாதிருப்பது வேதனைக்குரியது.

திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமொன்று தடைசெய்யப்பட்டது. அதிலும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளரான பிரபல சிங்கள நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகா அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான திரைப்படம் என்பதினாலேயே அது தடைசெய்யப்பட்டது என செய்திகள் கசிந்தும் பி.பி.சி. என்ற பிரபல ஊடகம், அதனைக் கண்டறிந்து உண்மைத் தகவலை அச்சமயம் வெளியிட்டது. அதனை மிகவும் இரகசியமாகவே அன்றைய அரசு வைத்திருக்க முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.பி.சி.யின் தகவலால் அது முடியாது போயிற்று.

தமிழீழ விடுதுலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தோல்வியடைந்து வருகின்றது. வெளிநாடுகளின் ஆதரவு புலிகளுக்கு இருப்பதனால் அந்த ஆதரவை முறியடித்து அந்த நாடுகளின் உதவியுடனேயே புலிகளை வெற்றிகொள்ள இலங்கை அரசு இரகசியமாக திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது.

வெளிநாட்டமைச்சர் தமிழராக இருப்பதனால், அவரை அரசு மற்றொரு தமிழ்க் குழுவைக் கொண்டு கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அப்படியே புலிகள் மீது சுமத்தி வெளிநாடுகளில் தீவிரமாகப் பரப்புரை செய்கின்றது. வெளிநாட்டமைச்சரையும் புலிகளே கொலை செய்துவிட்டார்கள் என்ற பரப்புரை சாதகமான பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது.

பின்பு இந்தியா தலைமையில் ஒன்றிணைந்து வெளிநாடுகளும் போரைத் துவங்கி விடுதலைப் புலிகளின் களத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதுதான் காமினி பொன்சேகாவின் திரைப்படம். யதார்த்தத்துக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் அவர் அன்று அந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தாலும் அதனை வெளியிட அன்றைய அரசு அனுமதியளிக்கவில்லை.

மிகப்பெரும் பிரச்சினையிலிருந்து அரசு விடுபட இந்தத் திரைப்படத்தின் மூலம் முக்கிய ஆலோசனையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது செயற்பட வேண்டுமாயின் இந்தத் திரைப்படம் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படக்கூடாது என அரசு முடிவெடுத்திருக்கலாம் என்றும் பி.பி.சி. அப்போது சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின், அதேபோன்றதொரு சூழ்நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்ட போதும், பி.பி.சி. இந்தச் சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. மேலும் சில ஊடகங்களிலும் இவ்வாறு வெளியாகியதை சம்பந்தன் எப்படி அறியாமல் இருந்தார் என்பது புரியவில்லை.

அவர் அது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை ஆராய்ந்து பார்க்கலாம். கொலைச் சந்தேக நபர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிய முற்படலாம்.

அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவருக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, யாசீர் அரபாத் பாலஸ்தீனர்களுக்கு தனிநாடொன்றைப் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழர்களுக்கு அவ்வாறு பெற்றுக்கொடுப்பார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

அந்த உரையின் மீது எழுந்த அரச அழுத்தங்களின் பின்னணியில் சம்பந்தன் தமது உரையை நிகழ்த்தியதாகக் கருதினாலும், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சம்பந்தன் மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் எவரும் அறிந்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு ஆராய முற்பட்டால், தம்மையும் புலிகளுடன் இணைத்து இலங்கை அரசு கணித்துவிடும் என்ற அச்சமும் எழலாம்.

ஆனால், புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மக்களின் நல்வளர்ச்சிக்காக சேமித்து அனுப்பிய பணத்திலேயே அந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நானூறு கோடி ரூபாய் செலவில் தமிழர்களுக்கென பூரணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே ஓர் ஏக்கர் பரப்பளவில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பிய நிதியிலிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் திட்டமிட்ட முறையில் கலை, விஞ்ஞான, உயிரியல் உட்பட பல பீடங்களை உள்ளடக்கியதாக இப்பல்கலைக்கழகத்தினை அமைத்துள்ளார். கூடவே, விளையாட்டு மைதானமும், நீச்சல் தடாகமும் மிகச் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளரான முருகர் குணசிங்கம், தாம் கிளிநொச்சிக்கு 2008ஆம் ஆண்டு சென்றபோது இப்பல்கலைக்கழகத்தை நேரில் பார்த்து பெரும் வியப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீதமான கட்டட வேலைகள் பூர்த்தியடைந்த நிலையிலேயே அப்போது இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அபிவிருத்தித் திட்டங்களை புள்ளிவிபரங்களுடன் விளக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். முதல் வெளியிடு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகைச் செய்கை, குளங்களைப் புனரமைத்து உப உணவுப் பயிர்ச்செய்கை, விவசாயம், நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டம், கரவைப் பசுமாடுகளை உள்ளடக்கிய பிரமாண்டமான பண்ணை, வயோதிபர் விடுதி, கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பூரணத்துவமான மருத்துவ விடுதிகள், வட்டக்கச்சியில் மிகப் பெரிய விவசாயப் பண்ணை உட்பட சுமார் 1,200 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேரில் கண்டுள்ளார்.

ஆனால், இன்று இவையெல்லாவற்றையும் இராணுவம் கைப்பற்றி பலனை அனுபவித்து வருவது சம்பந்தனுக்குத் தெரியாது. குறிப்பாக தமிழ் மாணவர் கல்விக்கு பெரிதும் உதவும் பல்கலைக்கழகம் இராணுவத்தினரின் தங்கும் விடுதியாக மாறியுள்ளது.

தாயக மக்களின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனுப்பிய பணத்திலேயே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்த இடங்களை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு இராணுவம் வெளியேறிவிட வேண்டும் என ஏன் சம்பந்தனால் கேட்க முடியாது?

இவ்வாறு தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட அமைப்பை மிக எளிமையாக � தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யாத சம்பந்தன் � பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் சர்வசாதாரணமாகக் குறிப்பிட்டது ஓர் இமாலயத் தவறு என்பதை இப்போது உணர்கின்றாரா?

வட மாகாண சபைத் தேர்தலில் இடம்பெற்று, அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அந்தச் சபையிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்படும் என்ற காரணத்திற்காகவே மாகாணசபைத் திட்டத்தையே இரத்துச் செய்ய அரசு முயற்சிக்கின்றதாக புலம்பெயர் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத வெற்றிடமொன்று முள்ளிவாய்க்காலின் பின் ஏற்பட்டபோது, அதனை முழுமையாக நிரப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாது என்பதை தமிழர்கள் அறிவர். ஆனால், தாயக நிலைமைகளை வெளிநாடுகளுக்கு அறிவிக்கும் பணியைத் தவிர வேறு எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாது என்பதும் யாதார்த்தமானது.

ஆனால், அமெரிக்காவின் தேசிய நலன் சார்ந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லும் அட்டவணை செயற்றிட்டத்துக்கு உதவுவதன் மூலம் ஏதாவது நன்மைகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைக்குமா என முயற்சித்துப் பார்க்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அமெரிக்காவின் ஆலோசனைப் படி சில நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்றார். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் சிறிலங்காவுக்கு எதிரான காய் நகர்த்தல்களுக்கு சம்பந்தனும் உதவி வருகிறார்.

1977ஆம் ஆண்டு முதல் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் சம்பந்தன், கடந்த 35 ஆண்டு காலமாக தமிழருக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சேவைகள் எதனையும் செய்யவில்லை. அதேநேரத்தில் அவரின் நாடாளுமன்ற உரை கடந்த முப்பதாண்டு கால தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.

எனவே, கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதியுடன் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என புலம்பெயர் ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. அவர் தானாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தற்போது உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராவதற்கு வழிவிட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும். �நுணலும் தன் வாயால் கெடும்� என்பதைப் போல, தமிழரின் விடுதலையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில் உரையாற்றிய சம்பந்தன் இனிமேல் தமிழரின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

[http://www.seithy.com/breifArticle.php?newsID=72103&category=Article&language=tamil]

தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகிறதா?

-கே.சஞ்சயன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது.

ஏனென்றால், போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கழித்தும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான எந்த முன்முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் கூட, ஏதோ பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டது போலவே அமைந்துவிட்டது. உருப்படியான தீர்வு முயற்சிகளில் இருந்து விலகிச் சென்ற அந்தப் பேச்சுக்கள் முடங்கிப்போய் பலகாலமாகி விட்டது.

மீளவும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்ட போதும், அவை பயனளிக்கவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்பது அரசின் பிடிவாதமாக உள்ளது. தெரிவுக்குழுவுக்குத் தாம் வர முன்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஓர் இணக்கப்பாட்டுக்கு அரசாங்கம் வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்பில் இருந்து நழுவிச் செல்லவே விரும்புகிறது. ஒரு தீர்வை முன்வைத்து சிங்களத் தேசியவாத சக்திகளின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தின் நகர்வுகள் அடுத்தடுத்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டே அமைந்துள்ளன. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள போதும், தமது அரசியல் நலன்களை புறக்கணித்து இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு காண்பதற்கான துணிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இல்லை என்பது வெளிப்படையாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போயிருந்தால், சிலவேளை அவரிடம் அந்த துணிவு வந்திருக்கக் கூடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தைச் செய்து, அடுத்தமுறையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடக் கூடிய சூழலை உருவாக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு அந்தத் துணிவு வருவது கடினமானதே.

இன்னொரு பதவிக்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் கனவும், அரசியல்தீர்வு குறித்த துணிச்சலான முடிவை எடுக்க அவருக்கு தடையாக உள்ளது. தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு சில காலங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எல்லாமே இருந்தும், தெரிவுக்குழு என்று இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம். தெரிவுக்குழுவில் வைத்து, 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான ஒரு கனவிலும் அரசாங்கம் உள்ளது. இதுவும் தெரிவுக்குழு என்ற பொறியை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு ஒரு காரணம்.

தெரிவுக்குழுவில் பெரும்பாலும் ஆளும்கட்சி உறுப்பினர்களே இருக்கும் நிலையிலும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகமாக இருக்கின்ற சூழலிலும், தமிழருக்கு சாதகமான எந்தவொரு தீர்வையும் அதன் வழியாகப் பெற முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சம். இத்தகைய சூழலில் தான், அரசியல்தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்று எட்டப்படும் என்ற உறுதிப்பாட்டைக் கொடுத்தே, அரசாங்கம் போரில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த உறுதிப்பாட்டை அரசாங்கம் காப்பாற்றவில்லை. காப்பாற்றவும் போவதில்லை.

ஏனென்றால், அரசாங்கம் ஓர் அரசியல்தீர்வை எட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக்  கொண்டிருந்தால், அதை இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடித்திருக்கலாம். இதனால், அரசின் வாக்குறுதிகள் நம்பகத்துக்குரியதல்ல என்ற கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களிடம் உருவாகியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட அரசாங்கம், சூட்டோடு சூடாக ஓர் அரசியல்தீர்வு முயற்சியில் இறங்கியிருந்தால், தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் போர் வெற்றியின் பின்னர் தன்னையும் தனது அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ளவே இந்தக் காலத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இத்தகைய பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த உண்ணாவிரத எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ஓர் ஆண்டு காலக்கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காது போனால், அவரது உண்ணாவிரதப் போர் இடம்பெறுவது உறுதியாகவே இருக்கும் என்று நம்பலாம்.

ஏனென்றால், ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல்கட்சியின் தலைவராக உள்ள அவர், இந்த எச்சரிக்கையை விடுத்து விட்டு சும்மாயிருந்து விடமுடியாது. அதேவேளை, அவரது இந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் ஏற்கத் துணிவார்களா என்பது கேள்விக்குரியது. அதுபற்றி யாரும் இதுவரை வெளிப்படையாக கருத்துக் கூறவில்லை.

எவ்வாறாயினும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும், தொடர்ந்து ஏமாறத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தும் இத்தகையதொரு போராட்டம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் பயங்கரவாத முத்திரை மூலம் அடக்கப்பட்ட பின்னர், அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் ஒரு நிகழ்வாக இத்தகைய உண்ணாவிரதம் அமையும். சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்படத்தக்க எந்தவொரு போராட்டத்தையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போல அரசாங்கத்தினால், இலகுவாக அடக்கிவிட முடியாது. அதுமட்டுமன்றி, விடுதலைப் புலிகளுக்கு கிடைக்காத சர்வதேச அரசியல் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பெற்றுள்ளது. அதன் தலைவர் ஒருவர், அரசியல்தீர்வுக்காக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சர்வதேச சமூகம் சும்மாயிருக்காது.

ஷிரானி பண்டாரநாயக்கவை தலைமை நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பை விடவும், கடுமையான நெருக்கடி, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் ஏற்படுத்தப்படும்.

இப்போது ஏற்பட்டுள்ள மௌனத்தை – தேக்க நிலையை உடைப்பதற்கு நிச்சயமாக – கனமான தாக்கத்தை ஏற்படுத்தத்தக்க அரசியல் போராட்டம் ஒன்றே தமிழர் தரப்புக்குத் தேவைப்படுகிறது. இல்லையேல் காலம் இழுத்தடிக்கப்படுவதுடன், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வும் எட்டாத தொலைவுக்குச் சென்றுவிடக் கூடிய ஆபத்து உள்ளது.

இந்தநிலையில், தமிழ் மக்களின் சார்பில் பேசும் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்குமேயானால், அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும்.

அரசியல்தீர்வு ஒன்றுக்கு இந்த நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், அது இன்னும் வலிமையானதாக – அரசியல்தீர்வுக்கு அருகே தமிழர்களைக் கொண்டு சென்று விடத்தக்கதாக இருக்க வேண்டும்.

அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முனைகளில் தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உணர்ந்து கொண்டுள்ளார்.

அதேபோன்று கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள். இது தமிழர் தரப்பின் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்து – ஏமாற்றத்தில் இருந்து உருவாகியுள்ள சூழல். இதனை அரசாங்கம் எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.

இதை சாதாரணமானதொரு எச்சரிக்கையாகக் கருதி புறமொதுக்கிக் கொண்டால், அதன் விளைவு அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே அமையும். ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அடைய முடியாத தீர்வைத் தருமாறு கேட்கவில்லை. தமிழீழத்தையோ தனிநாட்டையோ கேட்கவில்லை. நியாயமான – சாத்தியமான அரசியல்தீர்வு ஒன்றைக் கோரும் அவரது எதிர்பார்ப்பு தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரியது அல்ல.  தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வன்முறை, பயங்கரவாதம் என்று காரணம் காட்டி ஒதுக்கித் தள்ளியது போன்று, இத்தகையதொரு போராட்டத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகளை ஒழித்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கு ஏதோ ஒருவகையில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகமும் காரணமாக இருந்தது. எனவே, சாத்வீகப் போராட்டம் ஒன்றை சர்வதேச சமூகம் ஒதுக்கி வைக்க முடியாது. ஆதரவு கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்படியொரு போராட்டம் நடந்தால், அது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களின் மற்றொரு எழுச்சியாக அமைந்து விடும். அதை அரசாங்கத்தினால் அடக்கவும் முடியாது, அடக்காமல் இருக்கவும் முடியாது.

அவ்வாறு அடக்கப்பட்டால், வன்முறையாக வெடிக்கும் ஆபத்தும் உருவாகும். எனவே, கத்திமேல் நடக்கும் ஒரு பயணத்துக்கு தயாராவதை விட வேறு தெரிவு ஒன்று அரசுக்கு இருக்க முடியாது. தமிழர்கள் இன்னொரு போராட்டத்துக்குத் தயாராக முன்னர், அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பது தான் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும். அத்தகைய அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் துணியுமா என்ற கேள்விக்கான விடையை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

[http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/53690-2012-11-28-13-49-47.html

மலைக்க வைக்கும் “மலாலா

மலைக்க வைக்கும் “மலாலா

By ஆர். நடராஜ்

Malala”பெண்ணுக்கு பெண்தான் எதிரி’ என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி  அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.

ஆனால் பின்தங்கிய நாடுகள், மூடப்பழக்கங்களில் உழலும் சமுதாயங்கள், தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக இருக்கும்  இடங்களில், பெண்கள் அதுவும் குழந்தைகள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.

தீவிரவாதம் மிகுந்த இடங்களில் பள்ளிகள் முறையாக நடப்பதே அபூர்வம். நாட்கணக்காக மூடியிருக்கும். நடத்தப்படும் சில நாள்களிலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம்; இந்தச் சூழலில் எவ்வாறு படிக்க முடியும்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு “கற்றலில் இனிமை’ என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வியில் ஈடுபட முடியுமா?

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. அதில் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா என்ற சிறு நகரத்தில் வசிப்பவள் மலாலா யூசஃப்சாய். தந்தை யூசஃப்சாய் சமூக ஆர்வலர். எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துபவர். பஸ்தூன் வம்சாவளியில் வந்த முஸ்லிம் குடும்பம்.  பேசுவதோடு மட்டுமில்லாது ஒரு பள்ளியும் நடத்துகிறார். சிறுமி மலாலா, தந்தையின் கல்விச் சிந்தனைகளால் கவரப்பட்டு அதிக ஈடுபாடோடு சிறு வயதிலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தினாள்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த ஸ்வாட் மாவட்டம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதலும் எதிர்தாக்குதலும், இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். கல்விக்கூடங்கள் மூடிக் கிடக்கும்.

கல்வி அடிப்படை உரிமை –  எவ்வாறு தீவிரவாதிகள் அந்த உரிமையைப் பறிக்க முடியும் என்று சிறுமி மலாலாவின் உள்ளம் கொந்தளித்தது. தனது ஆதங்கத்தை இணையதளத்தில் இணைய வலைமூலம் உருது மொழியில் அவ்வப்போது வெளியிட்டாள். தந்தையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மலாலாவும் இந்தக் கூட்டங்களுக்குச் சென்று பேசுவாள். சிறுமியின் பேச்சும் நியாயத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் தைரியமும் எல்லோரையும் கவர்ந்தது.

பி.பி.சி. ஊடகம் அவளது இணைய வலையை வைத்து நிகழ்ச்சி நடத்தியது. அவளது பாதுகாப்பு கருதி புனைபெயரில் அவளது கருத்துகள், மிங்கோரா நகரத்தில் தீவிரவாத நிகழ்வுகள், எவ்வாறு பெண்கள் தலிபான்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அந்த நிகழ்ச்சி அமைதிக்காகப் போராடுபவர்களின் ஆதரவைப் பெற்றது.

பயமின்றி கருத்துப் பரிமாற்றம் – அதுவும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடத்தில்; விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சிறுமி மலாலா கவலைப்படவில்லை, ஆனால் சிந்தித்தாள்.

“என்னைத் தீவிரவாதிகள் தாக்கினால் அவர்களிடம் நிச்சயமாகக் கேட்பேன், “”உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எங்களது கல்வி உரிமையைப் பறிக்க?” என்று கேட்பேன்’ என்று இணைய வலையில் பதிவுசெய்தாள்.

தீவிரவாதிகள் தாக்குதலில் பொது இடங்களும் பள்ளிக்கூடங்களும் சேதமடைகின்றன. பள்ளிக்கூடங்களோ செயல்படவில்லை. இயங்காத பள்ளிக்கூடங்களை ஏன் தகர்க்க வேண்டும்? அதில் தீவிரவாதிகளுக்கு என்ன பயன் என்று விரக்தியாக மலாலா தனது இணைய வலையில் குறிப்பிடுகிறாள்.

பதினான்கு வயது மலாலாவின் துணிச்சலும் அவளுக்குப் பெருகிவருmalala-1ம் ஆதரவும் தீவிரவாதிகளின் வெறுப்பைத் தூண்டியது.

கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் மலாலா பள்ளியிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது அந்த வாகனம் தீவிரவாதிகளால் மடக்கப்பட்டது. பஸ்ஸில் ஏறிய தீவிரவாதிகள் மலாலாவை அடையாளம் கண்டு சுட்டனர்.  பாவிகளின் குண்டு அவளது தலையைத் துளைத்து கழுத்தில் சிக்கியது. மேலும் இரண்டு மாணவிகள் காயமுற்றனர்.

உடனடியாக மலாலா பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குண்டு எடுக்கப்பட்டது.  பின்பு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகர எலிசபத் மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலாலா தாக்கப்பட்ட சம்பவம் மதம், நாடுகள் என்ற எல்லையைக் கடந்து எல்லோராலும் கண்டனம் செய்யப்பட்டது.

பிரபல மேற்கத்திய இசைப்பாடகி மோடன்னா, “மனித சுபாவம்’ என்ற தனது பாடலை மலாலாவிற்கு அர்ப்பணித்தார். ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

பொதுச் செயலர் பான் கீ மூன், மலாலாவின் வீரச்செயல்களைப்  பாராட்டி எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள் துரித முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“”நான் மலாலா” என்ற முழக்கம் பெண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியமாகத் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடங்களில் மாற்றுப்பாதை வகுக்கவும்  வரையப்பட்டது.

பெண் கல்வி திட்டத்தில் முக்கிய மூன்று அம்சங்கள் உள்ளன. 1. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க திட்டம் வகுக்க வேண்டும். 2. எல்லா நாடுகளும் பெண் கல்விக்கு எதிரான பழக்கங்கள், நடவடிக்கைகளை சட்ட விரோதச் செயல் என்று பிரகடனப்படுத்த வேண்டும். 3. பள்ளிக்குச் செல்ல முடியாத 70 லட்சம் குழந்தைகளை 2015-க்குள்  பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய சர்வதேச அமைப்புகள் பாடுபட வேண்டும் என்பதாகும்.

மலாலா தாக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியான தினம் “நவம்பர் 10′, பெண் கல்வியை வலியுறுத்தும் தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பான் கீ மூன் தனது அறிக்கையில், “”சிறுமி மலாலா பெண் கல்விக்கு உலகின் முத்திரைச் சின்னம்” என்று புகழ்ந்துள்ளார். “”நவம்பர் 10 – மலாலா நாள்” உலகெங்கிலும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. சிறுமி மலாலா விரைவில் குணமடைய கூட்டுப் பிராத்தனை தொடர்ந்து நடைபெறுகிறது.

சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும் சிறிதளவும் மற்றவர்களிடம் இருந்தால் தீவிரவாதம் தலைதூக்க முடியாது. முறையற்ற தாக்குதல் என்ற பயத்தைப் பரவச்செய்து தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். நமக்கேன் வம்பு என்று சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதைக் குறை கூற முடியாது. தீவிரவாதிகள் கை ஓங்கினால் மக்கள் முடங்குவது இயல்பு. மலாலாபோல் துணிச்சலாகக் குரல் எழுப்புபவர்கள் வெகு சிலரே. ஆனால், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை எற்படும். பயம் தெளியும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்களது ஒத்துழைப்பும் பெருகும்.

மும்பையில் சமீபத்தில் அரசியல் தலைவர் மறைவில் நகரமே ஸ்தம்பித்தது. அவசியம் இருந்தாலொழிய, மற்றபடி வெளியே வர வேண்டாம் என்று மறைமுகமாக, பொறுப்பில் உள்ளவர்களே எச்சரிக்கை விடுத்தனர். இரவாமை என்ற நிலை வரக்கூடாது என்று வேண்டலாம். ஆனால், இறவாமை எவ்வளவு வேண்டினாலும் வராது. இயற்கையாகவோ விதியாலோ ஏற்படும் இறப்பை வைத்து பொதுச் சொத்துகளை அழிப்பது, உடைப்பது, மக்களை அச்சுறுத்துவது, சமுதாயத்தைச் செயலிழக்கச் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

இதைத்தான் இரண்டு இளம் பெண்கள் ஷஹீன்ததா, அவளது தோழி ரேணு தங்களது சமூக வலை தளத்தில் குறிப்பிட்டு மும்பை கடையடைப்பைப்பற்றிக் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அரசியல் தலைவரைப் பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லை. “ஏன் இந்த நிகழ்வை ஒட்டி நகரமே ஸ்தம்பிக்க வேண்டும்?’ என்று வினவியது சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும், கலவரத்தைத்  தூண்டும் வகையில் அமையும் என்று காவல்துறையினர் சைபர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் கைது செய்தது பலருடைய கண்டனத்திற்கு உள்ளானது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு உள்ள காவல்துறைக்கு, எப்போதும் – இருதலைக்கொள்ளி எறும்பு என்ற – நிலைமையைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நடவடிக்கை எடுத்தாலும் தகராறு, எடுக்காவிட்டால் பேரிழப்பு. ஷஹீனின் உறவினரின் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை சமூக விரோதிகளால்  தாக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள் மீது எழுத்து மூல புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

காவல் நிலையப் பொறுப்பில் உள்ளவர் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். நடவடிக்கை எடுக்காவிட்டால் சேனா ஆதரவாளர்கள் வேறுவிதமாக வன்முறையில் ஈடுபடலாம். அந்த இளம் பெண்களின் பாதுகாப்பே கேள்விக் குறி ஆகியிருக்கலாம். ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறப்பிற்குப் பிறகு அமைதி குலையாமல் மும்பையைக் காப்பற்றிய காவல்துறைக்கு இந்த சைபர் வழக்கு ஒரு பின்னடைவுதான்.

காவல்நிலைய அதிகாரிகளைக் குறைசொல்லிப் பயனில்லை. காவல்துறை அப்போதைய நிலவரத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம். எடுக்காவிட்டால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளுக்குக் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டப்படும். இது காவல்துறைக்கே உரித்தான பொறுப்பில் உறையும் சங்கடங்கள்; நிச்சயமாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் வழக்குப் பதிவு செய்திருக்க முடியாது.

உரிய தருணத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எந்த சவால்கள் வந்தாலும் சமாளிக்கும் திறமைதான் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். அவ்வாறின்றி கலகக்காரர்களுக்கு பயந்து வழக்கு போடுவது, இரவில் இரண்டு பெண்களைக் கைது செய்வது தவறான அணுகுமுறையாகும்.

ஆனால் சமுதாயத்தில் பொறுப்பில் உள்ளவர்கள், சமூக நலவிரும்பிகள் ஏன் ஷஹீன் மாதிரியோ மலாலா போலோ குரல் எழுப்பத் தயங்குகிறார்கள், வசதிக்கு எற்றவாறு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.

தீவிரவாதிகள் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகள், அவர்களோடு இணக்கம் முறையற்றது,  தேச விரோதம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் போராளிகள் இல்லையேல் தீவிரவாதிகள் என்று கணக்குப் போடுவதால்தான் தீவிரவாதத்தை அறவே ஒழிக்க முடிவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுகிறது.

நாம் தீவிரவாத ஒழிப்பு நாள், சத்பாவனா திவஸ், தேசிய ஒருமைப்பாடு தினம் என்று அந்தந்த நாள்களில் உறுதி மொழி எடுக்கிறோம் ஆனால் நடைமுறைகள் கேள்விக்குறியாக இருக்கின்றன.

“”ஆயிரம் மலர்கள் பூக்கட்டும்” என்பது போல ஆயிரமாயிரம் மலாலாக்கள் உலகில் உதயமாக வேண்டும். மலாலாவிற்கு வந்த உணர்வு நம்மிடமும் உள்ளது. “”நானும் மலாலா” என்று வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம். அப்போதுதான் சாந்தி நிலவவேண்டும் என்பது மெய்ப்படும்.

– Dinamani-

[http://voiceofmannar.com]